சென்னை ஒன் செயலியில் 50 லட்​சம் டிக்​கெட்​டு​கள் விற்​கப்​பட்​டுள்​ள​தாக கும்டா அதி​காரி​கள் அறிப்பு!!

சென்னை:
சென்னை ஒன் செயலியில் 50 லட்​சம் டிக்​கெட்​டு​கள் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது.

இந்த குழு​மம் வாயி​லாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த செப்​.22-ம் தேதி தொடங்கி வைக்​கப்​பட்ட இந்த செயலி மூல​மாக மெட்ரோ ரயில், மின்​சார ரயில், மாநகர பேருந்​துகளில் பயணிப்​ப​தற்​கான டிக்​கெட்​டு​களை கியூஆர் குறி​யீடு வழி​யாக பெறலாம்.

இந்த 3 சேவை​களுக்​கும் சேர்த்து அல்​லது தனித் தனி​யாக​வும் மக்​கள் இந்த செயலியில் டிக்​கெட் பெற முடி​யும். அறி​முகம் செய்​யப்​பட்​டது முதல் பொது​மக்​கள் இடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெற்று வரு​கிறது.

தொடந்து இந்த செயலியில் பல்​வேறு வசதி​கள் கொண்டு வரப்​பட்​டன. மாநகர பேருந்​துகளுக்​கான மாதாந்​திர பாஸ் பெறும் வசதி, ஒரு ரூபாய் கட்​ட​ணம் செலுத்​தி, மெட்​ரோ, மாநகர பஸ், ரயி​லில் ஒரு முறை சலுகை பயணம் ஆகியவை கொண்டு வரப்​பட்​டன.

இந்த செயலி பேருந்​துகளில் சில்​லரை பிரச்​சினை, ரயில், மெட்ரோ நிலை​யங்​களில் டிக்​கெட் எடுப்​ப​தற்கு வரிசை​யில் காத்​திருப்​பது உள்​ளிட்ட சிக்​கல்​களுக்கு தீர்வு அளிக்​கிறது. இது​வரை 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இந்த செயலியை பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை ஒன் செயலியில் 50 லட்​சம் டிக்​கெட்​டு​கள் விற்​கப்​பட்​டுள்​ள​தாக கும்டா அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மேலும், செயலி அறி​முகப்​படுத்​தப்​பட்ட போது தின​மும் சராசரி​யாக 20 ஆயிரம் டிக்​கெட்​டு​கள் விற்​பனை​யான நிலை​யில், தற்​போது, 35 ஆயிரம் டிக்​கெட்​டு​கள் வரை விற்​பனை​யா​வ​தாக அதி​காரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *