திருமண வாழ்வு தரும் மகா சிவராத்திரி!!

மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் ‘சிவனின் மகா இரவு’ என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது.

திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.

தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை.

யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.

சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *