நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்; மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!!

சென்னை;
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சியுரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய இபிஎஸ், ”இன்னும் இரண்டு மாதம் தான்… ஏப்ரலில் தேர்தல் வரும். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும்.

நம் கூட்டணி வலிமையானது அதிமுக தான் தலைமை. வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சி அமைக்கும், அதிமுக தலைவர் தான் முதல்வர்.

திமுக கூட்டணி அப்படியா இருக்கிறது? காங்கிரஸ் பங்கு கேட்கிறது. எப்போதும் உங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடம் என்று பிரச்னை. தேர்தல் வரை இந்தக் கூட்டணி நிலைக்குமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

இரண்டு மாதம் முன்பு ஸ்டாலின் என்ன பேசினார்..? இபிஎஸ் கடையை விரித்து வைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்றார்.

பலமான கூட்டணி அமைந்துவிட்டது. இது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்கு உருவான கூட்டணி. உங்கள் கூட்டணி அப்படியில்லை சுயநலம் நிறைந்த கூட்டணி.

அதனால் தான் திமுகவின் நிலை தெரிந்து காங்கிரஸ் பங்கு கேட்கிறது, விசிக பட்டும் படாமலும், பங்கு இருந்தால் பரவாயில்லை என்று கேட்கிறார்கள்.

இப்போது புதிதாக ஒரு கட்சி சேர்ந்திருக்கிறது. அந்தம்மா மாநாடு நடத்தியபோது, அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கிறது. அப்படிப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.

நம் கூட்டணி ஒரே நிலைப்பாடு அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும், மக்கள் விரோத திமுகவுக்கு நிரந்தர விடுதலை கொடுக்க வேண்டும்.

இதுதான் நம் கூட்டணிக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். லேட்டாக கூட்டணி அமைத்தாலும் லேட்டஸ்டா அமைத்த கூட்டணி” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *