கொளத்தூரில் 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்கி​ய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் !!

​சென்னை:
கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: சென்னை பெரம்​பூர் டான்​பாஸ்கோ பள்ளி வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கொளத்​தூர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சார்ந்த 2007 பயனாளி​களுக்கு இலவச வீட்​டுமனைப் பட்டாக்களை வழங்​கி​னார்.

மேலும், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.1.61 கோடி நவீன வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்ள குளிரூட்​டப்​பட்ட கொளத்​தூர் பேருந்து நிறுத்​தம் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.40.59 லட்​சத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள சாலை​யோரப் பூங்​கா, ரூ.70 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள 2 அமுதம் நியாய விலைக் கடைகள், ரூ.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த குழந்​தைகள் வளர்ச்சி மையம், ரூ.25 லட்​சம் செல​வில் அமைக்​கப்​பட்​டுள்ள நவீன பயணி​யர் நிழற்​குடை ஆகிய​வற்றை திறந்து வைத்​தார்.

கல்​லூரி கட்​டிடம் திறப்பு: இதையடுத்​து, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில், கொளத்​தூர் கபாலீஸ்​வரர் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரிக்கு ரூ.31.45 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடங்​களைத் திறந்து வைத்​தார். அப்​போது, முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:

அறநிலை​யத் துறை சார்​பாக, கல்வி எனும் அறப்​பணிக்கு இந்​தக் கல்​லூரி ஒரு சாட்​சி​யாக இருக்​கிறது.

மாணவர்​களுக்கு நான் சொல்​லிக் கொள்​வது, கல்வி தான் கடவுள், கல்வி எனும் கடவுள் உங்​களுக்கு எல்​லா​வற்​றை​யும் வழங்​கும். படிப்​பு​தான் உங்​களை உயர்த்​தும்.

இன்று இந்​தியா முழு​வதும் பின்​பற்​றும் மாடலாக திரா​விட மாடல் இருக்​கிறது என்​றால், அந்த திரா​விட மாடல் அரசின் மாடல் தொகு​தி​யாக இருப்​பது கொளத்​தூர்.

ஏதோ தேர்​தல் வரும்​போது மட்​டும் ஒன்​றிரண்டு திட்​டங்​களை திறந்து வைக்​க​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக, ஒவ்​வொரு மாத​மும் வந்​து, உங்​களுக்​குத் தேவை​யான எல்​லா​வற்​றை​யும் செய்து கொண்​டிருக்​கிறோம்.

இந்​தக் கல்​லூரியை திறந்து சில ஆண்​டு​களி​லேயே 516 மாணவர்​கள் வளாக நேர்​காணலில் தேர்​வாகி பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் பெற்​றிருக்​கின்​றனர்.

இந்த எண்​ணிக்கை அதி​க​மாக வேண்​டும். இது கொளத்​தூருக்கு மட்​டுமல்ல. இதே​போல தமிழகம் முழு​வதும் ஒவ்​வொரு தொகு​தி​யிலும், ஒவ்​வொரு ஊரிலும், இது​வரை நடக்​காத அளவுக்கு முன்​னேற்​றப் பணி​களைச் செய்​திருக்​கிறோம்.

இந்​தி​யா​விலேயே எந்த மாநிலத்​தி​லும், எங்​கும் இல்​லாத வகை​யில் பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி இருக்​கிறோம்.

மக்​களை மையப்​படுத்​தி, மக்​களைத் தேடி வந்து சேவை​களை வழங்​கு​கின்ற மக்​களாட்​சி​யாக திரா​விட மாடல் பெயரெடுத்​திருக்​கிறது. இந்த நல்​லாட்சி தொடர, நம்​முடைய கொளத்​தூர் மேலும், மேலும் உயர, உங்​களு​டைய ஆதரவு என்​றும் எங்​களுக்கு இருக்​கும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, அர.சக்​கர​பாணி, பி.கே.சேகர்​பாபு, கோவி.செழியன், அன்​பில் மகேஸ், மேயர் ஆர்​.பிரி​யா, வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, வீட்​டு​வச​தித் துறை செயலர் காகர்லா உஷா, அறநிலை​யத் துறை செயலர் மணி​வாசன், பள்​ளிக்​கல்வி செயலர் சந்​திரமோகன், சிஎம்​டிஏ உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்கர், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையர் தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *