விசுவாவசு ஆண்டு மாசி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 10.50 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 11.05 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி, திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
இன்று சர்வ ஏகாதசி. கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் குதிரை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பவனி. குலசேகரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-புகழ்
மிதுனம்-சிறப்பு
கடகம்-உறுதி
சிம்மம்-பண்பு
கன்னி-பரிசு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-கவனம்
தனுசு- கடமை
மகரம்-பக்தி
கும்பம்-ஓய்வு
மீனம்-திடம்