மேஷம்
தடைகள் விலகும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வரலாம். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
ரிஷபம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு வரலாம். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.
மிதுனம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
துன்பங்கள் தூளாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளைய வழக்குகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். விடியும்பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.
கன்னி
எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். ஆற்றல் மிக்க நண்பர்கள் ஆதாயம் வரும் வழியைக் கூறுவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
முன்னேற்றம் கூடும் நாள். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
விருச்சிகம்
காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் உண்டு. முயற்சி எடுத்த எதுவும் முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
மகரம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணங்களின்போது பொருட்களின் மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும்.
கும்பம்
குதூகலம் கூடும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மதிநுட்பத்தால் மகத்தான காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
மீனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை விலகும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும்.