பிராக்:
பிராக் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், செக்குடியரசின் டேவிட் நவராவுடன் மோதினார்.
இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 72-வது நகர்த்தலின் ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்விந்த் சிதம்பரம் தனது 4-வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார்.
இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய அர்விந்த் சிதரம்பரம் 29-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.