அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து!!

சென்னை:
அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தினத்​தையொட்டி ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அய்யா வைகுண்​டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.

இதையொட்​டி, தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கடற்​கரை​யில் அமைந்​துள்ள அய்யா வைகுண்​டர் அவதா​ரப​தி​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

அதே​போல, சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்​மபதி கோயி​லில் நேற்று சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன. இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். அய்யா வைகுண்​டர் அவதார தினத்தை முன்​னிட்டு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது: ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: பிரிட்​டிஷ் காலனித்​துவ ஆட்சி நமது நாகரிக அடை​யாளத்தை அழித்​து, நமது மக்​களை அடக்க முயன்ற காலத்​தில், விஷ்ணு​வின் தெய்​வீக அவதா​ர​மான அய்யா வைகுண்​டர், தர்​மத்​தைக் காக்​க​வும், சமூக வலிமையை மீட்​டெடுக்​க​வும், சனாதன தர்​மத்​தின் உணர்வை மீண்​டும் தட்​டி​யெழுப்​பும் வகை​யில் அவதரித்​தார்.

ஒடுக்​கு​முறைக்கு சவால் விடுத்​து, சமூகப் பாகு​பாட்​டைக் களைந்த அவர் நமது கலாச்​சா​ரம் மற்​றும் தார்​மீக அடித்​தளங்​களை மீண்​டும் நிலைப்​படுத்​தி​னார்.

முதல்​வர் மு.க.ஸ்டா​லின்: இடுப்​பில் இருந்த துண்டை தலைக்​குக் கிரீட​மாக மாற்​றிய அய்யா வைகுண்​டரை நாம் பெற்ற நாள். கீழ்​நோக்​கிப் பிடித்​தா​லும் மேல்​நோக்​கியே எரி​யும் தீபத்​தைப்​போல, விளக்​கின் ஒளி​யாய், வீரத் தனமாக இருங்​கள் என சமத்​து​வக் கனலை சமூகத்​தில் விதைத்து நிறைந்​தவர் அய்யா வைகுண்​டர்.

தாழக் கிடப்​பாரை தற்​காப்​பதே தர்​மம் எனும் அவரது கூற்​றையே ஆட்​சிக்​கான அடிப்​படை​யாய் கொண்டு நலிந்​தோரின் நலம் நாடும் அரசாக நமது அரசும் செயல்​படு​கிறது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வபெருந்​தகை, பாமக தலை​வர் அன்​புமணி, தவாக தலை​வர் வேல்​முரு​கன், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர்​ சீமான்​ உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *