சென்னை:
துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்துள்ள படம், ‘லீடர்’. இதில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் துரை.
செந்தில்குமார் கூறும்போது, “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் ‘லீடர்’. தனது மகளுக்காக என்ன வேண்டு மானாலும் செய்யத் துணியும் தந்தையைச் சுற்றி கதை சுழல்கிறது.
இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிப்பூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்” என்றார். நடிகர்கள் ஷாம், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.