சர்​வ​தேச பிராக்ஸ் செஸ்: ஜோர்டானை வீழ்த்​திய​ அரவிந்த்!!

பிராக்:
செக்​குடியரசின் பிராக் நகரில் சர்​வ​தேச பிராக்ஸ் செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதன் 8-வது சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அரவிந்த் சிதம்​பரம், நெதர்​லாந்​தின் ஜோர்​டான் வான் பாரஸ்டை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் அரவிந்த் சிதரம்​பரம் 63-வது காய் நகர்த்​தலின் போது வெற்றி பெற்றார்.

அதேவேளை​யில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், ஜெர்​மனி​யின் வின்​செட் கீமருக்கு எதி​ரான ஆட்டத்தை 47-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். 8 சுற்றுகளின் முடி​வில் அரவிந்த் சிதம்​பரம் 4 புள்​ளி​களு​டன் 6-வது இடத்​தில் உள்​ளார்.

உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவ் 5.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.

ஜோர்​டான் வான் பாரஸ்ட் 5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தி​லும், செக்​குடியரசின் டேவிட் நவரா 4.5 புள்​ளி​களு​டன் 3-வது இடத்திலும் உள்​ளனர். 10 வீரர்​கள் பங்​கேற்​றுள்ள தொடரில் குகேஷ் 2.5 புள்​ளி​களு​டன் கடைசி இடத்​தில் உள்ளார். இன்று கடைசி சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *