புதுடெல்லி:
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலில் அவர் உட்பட பலர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அலி காமேனி தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழிகள் மீது 50 இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பதுங்கு குழிகளை தகர்க்கும் அளவுக்கு மிகவும் அதிரடியான ஆயுதங்கள் கொண்டு இஸ்ரேல் விமானப்படையினரால் தாக்கப்பட்டது.
இந்த பதுங்கு குழிகளில் இருந்தபடிதான் அவர் போர் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.
50 விமானங்கள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியபோது அப்பகுதி இருந்த கட்டிடங்கள் முழுவதும் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு எழும்பும் புகை மண்டலமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள், ஈரான் இடையேயான போர் 7-வது நாளை எட்டிய நிலையில் நேற்று இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.