வெற்றி மகிழ்ச்சியில் தனது காதலிக்கு மைதானத்தில் வைத்து ஒரு மோதிரத்தை பரிசளித்த இஷான் கிஷன்!!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அனைத்து வீரர்களும் தனது குடும்பத்தினருடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி மகிழந்தனர்.

அந்த வகையில் இஷான் கிஷன் தனது நீண்டகால காதலியான அதிதி ஹுண்டியாவை மைதானத்தில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.


மைதானத்திற்கு வந்த அதிதி ஹுண்டியாவுடன் இணைந்து இஷான் கிஷன் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.

இறுதியாக இஷான் கிஷன் தனது காதலிக்கு மைதானத்தில் வைத்து ஒரு மோதிரை பரிசளித்து தனது காதலை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஒரு மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் 2017 ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ இறுதிப் போட்டியாளர் மற்றும் 2018 ‘மிஸ் திவா சூப்பர்நேஷனல்’ பட்டத்தை வென்றவர்.


கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் கொண்டாடியது இவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

முன்னதாக பிப்ரவரி 2026-ல், இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே அளித்த பேட்டியில், இஷான் மற்றும் அதிதியின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதாகவும், அவர்களுக்குத் திருமணத்தில் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *