அணி​யில் உள்ள எனது சக வீரர்​களு​டன் போட்​டி​யிடு​வதை நான் விரும்​புவ​தில்​லை – தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்!!

அகம​தா​பாத்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 321 ரன்​கள் குவித்த இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்​றார்.

அவர், மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான சூப்​பர் 8 சுற்று ஆட்​டத்​தில் 97* ரன்களும், இங்​கிலாந்​துக்கு எதி​ரான அரை​யிறுதி ஆட்டத்தில் 89 ரன்​களும், நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக இறு​திப் போட்​டி​யில் 89 ரன்​களை​யும் விளாசி அணி​யின் வெற்​றிகளில் முக்​கிய பங்கு வகித்​தார்.

தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்​சன் கூறியதாவது:

ஒன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு மேற்கிந்தியத் தீவு​களில் உலகக்​கோப்பையில் விளை​யாடிக்​கொண்​டிருந்த போதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்​டும் என்று நான் சிந்​தித்​து, கற்​பனை செய்​து, பயிற்​சி​யும் எடுத்து வந்​தேன்.

ஆனால், நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு என் கனவு​கள் அனைத்​தும் சிதைந்​து​விட்​ட​தாகவே கரு​தினேன்.

ஆனால், கடவுள் எனக்​காகத் தனிப்​பட்ட திட்​டங்​களை வைத்​திருந்​தார் என்று நினைக்​கிறேன்.

நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு நான் முற்​றி​லும் உடைந்து போயிருந்​தேன், அந்த வலியை நான் அப்​படியே ஏற்​றுக்​கொண்​டேன்.

நான்கு முதல் ஐந்து நாட்​களுக்கு என்​னால் என் படுக்​கையை விட்டு நகரக்​கூட முடிய​வில்​லை. என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை.

நான் ஒரு​வித​மான முடக்க நிலை​யில் இருந்​தேன். நான் மகிழ்ச்​சி​யாக இல்​லை, அதை என் நடத்​தை​யிலும் வெளிப்​படுத்​தினேன்.

எனக்​குக் கிடைத்த வாய்ப்​பு​களை நான் சரி​யாகப் பயன்​படுத்​த​வில்லை என்ற உண்​மையை ஏற்​றுக்​கொண்​டேன். எனக்கு நானே உண்​மை​யாக இருந்​தேன்.

அந்த உணர்ச்​சிகளு​டன் நான் போராட​வில்​லை, அதேசம​யம் நான் நம்​பிக்​கை​யுடன் இருப்​பது போல​வும் நடிக்​க​வில்​லை.

அந்த உண்​மையை நான் ஏற்​றுக்​கொண்​ட​வுடன், என்​னால் ஓரளவு விரை​வாக மீண்டு வர முடிந்​தது. ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக நான் கவுதம் கம்​பீரை உடற்​ப​யிற்சி கூடத்​தில் சந்​தித்​தேன்.

அப்​போது அவர் என்​னிடம், ‘சஞ்​சு, தயா​ராக இரு, அடுத்த போட்​டி​யில் நீ விளை​யாடப் போகிறாய்’ என்று கூறி​னார்.

அப்​போது என் மனதுக்​குள், ‘இப்​போது செயலில் காட்​டு​வோம். இதற்​காகத்​தான் நான் காத்​திருந்​தேன்’ என்று சொல்​லிக்​கொண்​டேன்.

அணி​யில் உள்ள எனது சக வீரர்​களு​டன் போட்​டி​யிடு​வதை நான் விரும்​புவ​தில்​லை. நாங்​கள் அனை​வரும் ஒரு பொது​வான இலக்​கிற்​காக இணைந்து போராடும்​போது​தான், என்​னால் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடிகிறது.

நியூஸிலாந்து தொடரின் போது, ‘நான் அணி​யில் இருப்​பேனா இல்​லை​யா?’ என்​பது பற்​றியே என் சிந்​தனை இருந்​தது.

அணி​யில் இடத்​திற்​காகப் போராடும்​போது நான் ஒரு​போதும் சிறப்​பாக விளை​யாடு​வ​தில்​லை.

ஆனால் வாய்ப்பு கிடைத்​த​போது, நாங்​கள் அனை​வரும் உலகக்​கோப்பை என்ற ஒரே இலக்​கிற்​காக இணைந்து போ​ராடினோம். இறு​தி​யில் எல்​லாம் சுப​மாக அமைந்​த​தில்​ எனக்​கு மகிழ்ச்​சி. இவ்​வாறு சஞ்​சு சாம்சன் கூறினார்.

ஐசிசி அணியில் 4 இந்திய வீரர்கள்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சிறந்த அணியை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து), ஜேசன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்), லுங்கி நிகிடி (தென் ஆப்பிரிக்கா), ஆதில் ரஷித் (இங்கிலாந்து), முசரபானி (ஜிம்பாப்வே), ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா).

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *