2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக நியமனம்!!

அகமதாபாத்:
ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னாள் வீரரான மேத்யூ ஹைடன், 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

2 முறை ஒரு​நாள் போட்டி உலகக் கோப்​பையை வென்றவரும், தனது காலத்​தில் ஆதிக்​கம் செலுத்​திய தொடக்க ஆட்​டக்​காரர்​களில் ஒரு​வரு​மான மேத்யூ ஹைடன், தனது புகழ்​பெற்ற சர்​வ​தேச கிரிக்​கெட் வாழ்க்கை அனுபவத்​தை​யும், நவீன​கால டி20 பேட்​டிங் நுணுக்​கங்​களில் உள்ள தனது திறமை​யை​யும் கொண்டு குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் பயிற்​சி​யாளர் குழு​வில் இணைந்​துள்​ளார்.

ஆஸ்​திரேலிய அணிக்​காக சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் அனைத்து வடி​விலும் 273 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ஹைடன் 15 ஆயிரத்​துக்கும் அதி​க​மான ரன்​களை குவித்​துள்​ளார். அவர், பல்​வேறு ஐசிசி தொடர்​களில் ஆஸ்​திரேலிய அணி​யின் வெற்​றிகளில் முக்​கிய பங்கு வகித்​துள்​ளார்.

குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் இயக்​குநர் விக்​ரம் சோலங்கி கூறும்​போது, ‘‘மேத்யூ ஹைடனின் நியமனம் எங்​களது பயணத்​தின் ஒரு முக்​கிய​மான கட்​டத்​தில் அமைந்​துள்​ளது.

சர்​வ​தேச கிரிக்​கெட்​டின் மிக உயர்ந்த மட்​டத்​தில் அவருக்கு இருக்​கும் அனுபவம் மற்​றும் வளர்ந்து வரும் இளம் வீரர்​களுக்கு வழி​காட்​டும் அவரது திறன் ஆகிய​வை, வரும் காலங்​களில் எங்​களது அணி​யின் பேட்டிங் அடை​யாளத்தை வடிவ​மைப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கும்” என்​றார்.

மேத்யூ ஹைடன் கூறும்​போது, “நல்ல பேட்​டிங் என்​பது எதிரணிக்கு அழுத்​தத்தை கொடுக்​கும். ஆனால், சிறந்த பேட்​டிங் என்​பது ஆட்​டத்​தையே தன்​வசப்​படுத்​தும். அந்​தத் தரத்​தைத்​தான் குஜ​ராத் டைட்​டன்​ஸ் அணி​யில் நாங்​கள் நிலை​நாட்ட விரும்​பு​கிறோம்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *