இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் அரை இறு​திக்கு முன்​னேறிய பாம்ப்ரி ஜோடி!!

இந்தியன் வெல்ஸ்:
அமெரிக்​கா​வின் இந்​தி​யன் வெல்ஸ் நகரில் இந்​தி​யன் வெல்ஸ் மாஸ்​டர்ஸ் டென்னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரே கோரன்​சன் ஜோடி ஆஸ்​திரி​யா​வின் அலெக்​சாண்​டர் எர்​லர், இத்​தாலி​யின் ஆண்ட்​ரியா வவாசோரி ஜோடி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது.

ஒரு மணி நேரம் 30 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பாம்ப்​ரி, கோரன்​சன் ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறியது.

ஆயிரம் புள்​ளி​கள் கொண்ட ஏடிபி மாஸ்​டர்ஸ் தொடரில் யுகி பாம்ப்ரி அரை இறு​திக்கு முன்​னேறு​வது இதுவே முதன்​முறை​யாகும். அரை இறுதி சுற்​றில் பாம்ப்​ரி, கோரன்​சன் ஜோடி பிரான்சின் ஆர்​தர் ரிண்​டர்க்​னெக், மொனாக்​கோவின் வாலண்​டைன் வச்​செரோட் ஜோடி​யுடன்​ மோதுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *