எஃப்​.ஐ.எச் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தகு​திச் சுற்​றில் அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​தியா – இத்​தாலி இன்று மோதல்!!

ஹைதராபாத்:
எஃப்​.ஐ.எச் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தகு​திச் சுற்​றின் அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​தியா – இத்​தாலி அணி​கள் இன்று பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. இந்த ஆட்​டம் இரவு 7.30 மணிக்கு நடை​பெறகிறது.

தெலங்​கா​னா​வின் ஹைத​ரா​பாத் நகரில் மகளிர் ஹாக்கி உலகக்​கோப்பை தகுதி சுற்று போட்டி நடை​பெற்று வருகிறது.

இந்​தத் தொடரில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய மகளிர் அணி, லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களில் விளையாடி 7 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து உலகக் கோப்​பை​யில் விளை​யாடும் வாய்ப்பை ஏற்​கெனவே உறுதி செய்​து​விட்​டது.

இதனால் இந்​திய மகளிர் ஹாக்கி அணி, தற்​போது தகுதி சுற்​றில் வெற்​றிக் கோப்​பையை கைப்​பற்​று​வதை இலக்காகக் கொண்​டுள்​ளது. இந்த இலக்கை நோக்கி ஓரடி முன்​னேறும் வகை​யில், இன்று நடை​பெற உள்ள அரை இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி இத்​தாலியை எதிர்கொள்​கிறது.

இத்​தாலி அணி ‘ஏ’ பிரி​வில் 4 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்​திருந்​தது. அந்த அணி தலா ஒரு வெற்​றி, தோல்​வி, டிராவை பதிவு செய்​திருந்​தது.

இந்​திய அணி​யில் நவ்னீத்கவுர் சிறந்த பார்​மில் உள்​ளார். நடப்பு தொடரில் 4 கோல்கள் அடித்​துள்ள அவர், அதிக கோல்​கள் அடித்​துள்ள வீராங்க​னை​களின் பட்​டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்​டுள்​ளார்.

அதேவேளை​யில் மறு​புறம் இத்​தாலி அணி தங்​களின் தாக்குதல் வீராங்​க​னை​யான ஃபெடரிகா கார்டா மீது அதிக நம்​பிக்கை வைக்​கக்​கூடும். நடப்பு தொடரில் அவர், இது​வரை 3 கோல்​கள் அடித்​துள்​ளார்.

புள்​ளி​விவரங்​களின்​படி பார்த்​தால், இத்​தாலி அணியை விட இந்​திய அணியே அதிக பலத்​துடன் காணப்​படு​கிறது. 2012 முதல் இரு அணி​களும் நேருக்கு நேர் 7 முறை மோதி உள்​ளன.

இதில் இந்​தியா 5 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்​தது. இத்​தாலி ஒரு ஆட்​டத்​தில் வெற்​றி​யும், ஒரு ஆட்டத்​தை டிரா​வும்​ செய்​திருந்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *