நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்; எங்களது திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது!! பர்மேன் கான்….

சென்னை:
2025 ஜனவரியில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றது. இங்கு பாசிமணி, வளையல் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண் மோனலிசா போஸ்லே தனது இயற்கையான மாநிறத்துக்கான வைரலானார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் எளிய குடும்பத்தை சேர்ந்த மோனாசிலாவுக்கு அதன் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

அவர் தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவின் அருமனுார் கோவிலில் நேற்று மோனலிசா தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார்.


இவர்களது திருமணம் இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. திருமணத்தில் கேரள அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர், தனது தந்தை தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாவும் தனக்கு பாதுகாப்பு கோரியும் கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருமணத்தின் பின் இன்று கணவர் பர்மான் கானுடன் மோனலிசா செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், “நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எங்களது திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது, இது லவ் ஜிஹாத் அல்ல” என்று மோனலிசா கூறினார்.


இருவருமே தங்களது மதங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரது கணவர் பர்மேன் கான் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *