இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி – இறுதிப்போட்டியில் மோதும் சபலென்கா- ரைபகினா!!

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்)-லிண்டா நோஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.


இதில் சபலென்கா 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டியில் அவர் கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினாவுடன் மோதுகிறார். 3-வது வரிசையில் இருக்கும் ரைபகினா அரைஇறுதியில் 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் சுட்ரேலினாசை (உக்ரைன்) வீழ்த்தினார். இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுஅரை இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் அல்காரஸ் (ஸ்பெயின்)-மெட்வதேவ் (ரஷியா), சின்னர் (இத்தாலி)-சுவரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *