கலிபோர்னியா:
இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவிடம் வீழ்ந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் அல்கராஸும், மேத் வதேவும் மோதினர். இதில் 6-3, 7-6(3) என்ற செட் கணக்கில் மேத்வதேவ் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
முதல்நிலை வீரரான அல்கராஸை, தனது சிறப்பான விளையாட்டால் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார் மேத்வதேவ். இறுதிச் சுற்றில் ஜன்னிக் சின்னரை, எதிர்த்து விளையாடவுள்ளார் மேத்வதேவ்.