அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியீடு!!

சென்னை ;
அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை வைத்து அவர் படப்பிடிப்பு எப்போது தான் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதனை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆனால், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், தயாரிப்பாளர் யார் என்ற கேள்விகளுக்கு இப்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது.

இன்று (மார்ச் 15) அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் அஜித்துக்கு கார் ரேஸ் இருக்கிறது.

2027-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை கார் ரேஸ் போட்டிகளில் அஜித் தீவிரமாக ஈடுபடவுள்ளர் என்பது தெளிவாகிறது. இதனால் அவர் படப்பிடிப்பில் எப்போது தான் கவனம் செலுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த அட்டவணை வெளியானதில் இருந்தே இணையத்தில் பல்வேறு செய்திகள் உலவி வருகின்றன. அஜித் தரப்பில் இருந்து அளித்த பேட்டியில், படப்பிடிப்புக்கு இடையே தான் கார் ரேஸ் போட்டிகளில் அஜித் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை இணைய வதந்திகளுக்கு பஞ்சமில்லை என்பது தான் உறுதி.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *