நேஷன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்திய மகளிர் அணி பங்கேற்பு!!

லாசேன்:
எப்​ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்​தில் உள்ள ஆக்​லாந்து நகரில் நடை​பெற உள்ளது.

இதில் இந்​தி​யா, நியூஸிலாந்​து, அமெரிக்​கா, ஜப்பான், கொரி​யா, சிலி, ஸ்காட்​லாந்​து, பிரான்ஸ் ஆகிய அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

ஹாக்கி புரோ லீக்​கில் பங்​கேற்​காத அதேவேளை​யில் தரவரிசை​யில் முன்​னணி​யில் உள்ள அணி​களுக்கு உயர்​தரப் போட்​டிகளை வழங்​கு​வதற்​காக கடந்த 2021-ம் ஆண்டு எப்​ஐஹெச் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை தொடர் தொடங்​கப்​பட்​டது.

இதில் வெற்றி பெறும் அணிக்​கு, அடுத்த சீசனில் புரோ லீக்​கிற்​குத் தகுதி பெறும் வாய்ப்பு வழங்​கப்​படும்.

கடந்த 2024-25-ம் ஆண்டு நடை​பெற்ற புரோ லீக் தொடரில் 9 அணி​கள் பங்​ககேற்ற நிலை​யில் இந்​திய மகளிர் அணி கடைசி இடத்​தைப் பிடித்​திருந்​தது.

இதனால் இந்​திய மகளிர் ஹாக்கி அணி அந்​தத் தொடரிலிருந்து தரம் இறக்​கப்​பட்​டது.

தற்​போது நேஷன்ஸ் கோப்​பை​யில் கலந்து கொள்​ளும் இந்​திய அணி அதில் வெற்றி பெறும் பட்​சத்​தில் மீண்​டும் ஹாக்கி புரோ லீக்கில் கால்​ப​திக்க முடி​யும்.

எப்​ஐஹெச் ஆடவர் நேஷன்ஸ் கோப்பை தொடர் தென் ஆப்​பிரிக்​கா​வின் கேப்​ட​வுன் நகரில் வரும் ஜூன் 11 முதல் 20-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதில் தென் ஆப்​பிரிக்​கா, நியூஸிலாந்​து, பிரான்​ஸ், கொரி​யா, ஜப்​பான், வேல்​ஸ், மலேசி​யா, ஸ்காட்​லாந்​து, அயர்​லாந்து ஆகிய அணி​கள் கலந்​து கொள்​கின்​றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *