“சினிமா அற்​புத​மான தொழில்” பியாண்ட் பிக்​சர்ஸ் போன்ற இளம் தயாரிப்​பாளர்​கள் இத்​துறைக்கு வந்​ததை வரவேற்​கிறேன் – விஜய் சேதுபதி!!

சென்னை:
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார்.

இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம், ப்ரார்த்​த​னா, அதிர்ச்சி அருண், மதுரை முத்​து, சோஃபா பாய் ரசூல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

மதன் கிறிஸ்​டோபர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஜஸ்​டின் பிர​பாகரன் இசையமைத்​துள்​ளார்.

மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இதன் டிரெய்​லர் வெளியீட்டு விழா​வில் படக்​குழு​வினருடன் விஜய் சேதுப​தி, கவின் ஆகியோர் கலந்​து​கொண்​டனர்.

விஜய் சேதுபதி பேசும்​போது, “சினிமா அற்​புத​மான தொழில். பியாண்ட் பிக்​சர்ஸ் போன்ற இளம் தயாரிப்​பாளர்​கள் இத்​துறைக்கு வந்​ததை வரவேற்​கிறேன்.

யார் என்ன சொன்​னாலும் பயப்பட வேண்​டாம். இது அட்​வைஸ் அல்ல, என் அனுபவத்​தில் இருந்து சொல்​கிறேன்.

ஓர் இயக்​குநர் எப்​படி படித்து வளர்​கிறாரோ, ஒரு நடிகர் எப்​படி கற்​றுக்​கொள்​கிறாரோ, அதே​போல் தயாரிப்​பாள​ரும் வியா​பாரம் மற்​றும் ஸ்கிரிப்ட் ஆகிய​வற்றை கற்​றுக்​கொண்​டால் நன்​றாக இருக்​கும்.

ஜி.​வி.பிர​காஷ் எப்​போதும் பள்ளி மாணவன் போலவே நடிக்க முடி​யும் போல இருக்​கிறது. எந்த கால​கட்​டத்​தி​லும் அவர் அதே இளமையோடு தோன்​றுகிறார்” என்​றார்.

ஜி.​வி.பிர​காஷ்கு​மார் கூறும்​போது, “ஆரம்​பத்​தில், புது தயாரிப்​பாளர்​களு​டன் பணி​யாற்​று​வ​தில் தயக்​கம் காட்டினேன்.

ஆனால், பியாண்ட் பிக்​சர்ஸ் திட்​ட​மிட்ட காலத்​துக்கு முன்பே படத்தை முடித்து வியா​பார​மும் செய்து​விட்​டனர். இந்​தப் படம் யாரை​யும் ஏமாற்​றாது.

என்​னையே பல இடங்​களில் அழ வைத்​தது. உங்​கள் தந்​தையை அல்லது நீங்​கள் ஓர் தந்​தை​யாக இருந்​தால் உங்களை இப்​படம் கொண்​டாட வைக்​கும்” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *