நீங்கள் டாட்டூ குத்​திக்​கொள்​ளக் கூடாது – நடிகை நமிதா பிரமோத்தை மிரட்​டிய இளைஞர் கைது!!

சென்னை:
மலை​யாள நடிகை​யான நமிதா பிரமோத், தமிழில் என் காதல் புதிது, அவள் பெயர் ரஜினி, நிமிர் உள்​ளிட்ட படங்களில் நடித்​துள்​ளார்.

சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வரும் அவரை சமூக வலை​தளங்​களில் ஏராளமானோர் பின் தொடர்​கின்​றனர்.

அவர் சமீபத்​தில்தான் டாட்டூ குத்​திக்கொள்​ளப் போவதாகத் தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் தெரிவித்திருந்​தார்.

அந்த பதி​வில், எர்​ணாகுளத்​தில் உள்ள ஒரு டாட்டூ ஸ்டூடியோவை குறிப்​பிட்டு அங்கு செல்​லும் நேரத்​தை​யும் குறிப்​பிட்​டிருந்​தார்.

அவர் குறிப்​பிட்​டிருந்த நாளில் அங்கு சென்​ற​போது எர்ணாகுளத்​தைச் சேர்ந்த விபின் என்ற இளைஞர் அவரை வழிமறித்​தார்.

நீங்கள் டாட்டூ குத்​திக்​கொள்​ளக் கூடாது என்று கூறி​னார். அது என் தனிப்​பட்ட விருப்​பம் என்று நமிதா பிரமோத் சொன்​னார்.

இதையடுத்து அந்த இளைஞர், நமிதா பிரமோத்தை முறையற்ற வகை​யில் தொட்டு மிரட்டி​யுள்​ளார்.

இதையடுத்து எர்​ணாகுளம் பளரிவட்​டம் போலீ​ஸில் அவர் புகார் செய்​தார். போலீ​ஸார் விபினை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *