அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம்; எடப்பாடியில் பழனிசாமி, தொண்டா முத்தூரில் எஸ்.பி.வேலுமணி போட்டி!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பாவும் போட்டியிடுகின்றனர்.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

  1. எடப்பாடி (86) : எடப்பாடி மு. பழனிசாமிகழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
  2. வேப்பனஹள்ளி (54) : கே.பி. முனுசாமி, கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  3. திண்டுக்கல் (132) : திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.
  4. நத்தம் (131) : நத்தம் இரா. விசுவநாதன், கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  5. தொண்டாமுத்தூர் (119) : எஸ்.பி.வேலுமணி, கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  6. குமாரபாளையம் (97) : பி. தங்கமணி, கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  7. ராயபுரம் (17) : டி.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  8. மைலம் (71) : சி.வி.சண்முகம், கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  9. மதுரை மேற்கு (194) : செல்லூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  10. பாலக்கோடு (57) : கே.பி.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  11. நன்னிலம் (169) : சு. காமராஜ், கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  12. வேதாரண்யம் (165) : ஓ.எஸ்.மணியன், கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  13. விராலிமலை (179) : டாக்டர் சி. விஜயபாஸ்கர், கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  14. கோவில்பட்டி (218) : கடம்பூர் ராஜூ, கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  15. திருமங்கலம் (196) : ஆர்.பி.உதயகுமார், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  16. சிவகாசி (205) : கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  17. மதுரவாயல் (7) : பா.பென்ஜமின், கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  18. கலசபாக்கம் (65) : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  19. திருப்பரங்குன்றம் (195) : வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
  20. பவானி (104) : கே.சி.கருப்பணன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  21. ஜோலார்பேட்டை (49) : கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  22. கரூர் (135) : எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
  23. அரியலூர் (149) : தாமரை எஸ்.ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு முன்னாள் தலைமைக் கொறடா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர் பட்டியலின் படி 23 வேட்பாளர்களில் 16 பேர் சிட்டிங் எம்எல்ஏ.க்கள், ஒருவர் எம்.பி. அது மட்டுமின்றி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று பாஜக முனைப்புக் காட்டிய நிலையில் அதிமுக இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மதுரை மேற்கு செல்லூர் ராஜூவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார்.

முன்னதாக நேற்று (மார்ச் 24), தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அறிவித்தார். இந்நிலையில் இன்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மார்ச் 25-ம் தேதி (இன்று) முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *