ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 2 எரி​வாயு கப்பல்​களுக்கு இந்திய கடற்படை​யின் போர்க்​கப்​பல் பாதுகாப்பு வழங்கி வரு​கிறது!!

புதுடெல்லி:
ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 2 எரி​வாயு கப்பல்​களுக்கு இந்திய கடற்படை​யின் போர்க்​கப்​பல் பாதுகாப்பு வழங்கி வரு​கிறது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது.

ஈரான் ராணுவத்​தின் சிறப்பு அனு​ம​தி​யுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரி​வாயு (எல்​பிஜி) கப்​பல்​கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்​ணெய் கப்​பல் ஆகியவை இந்​தியா வந்தன.

இந்த சூழலில் ஜக் வசந்த், பைன் காஸ் ஆகிய 2 எரிவாயு கப்​பல்​கள் ஈரான் ராணுவ சிறப்பு அனு​ம​தி​யுடன் நேற்று முன்​தினம் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தன.

இந்த கப்​பல்​கள் நேற்று சர்​வ​தேச கடல் எல்லை பகு​தியை வந்​தடைந்​தன. அவற்​றுக்கு இந்​திய கடற்​படையைச் சேர்ந்த ஒரு போர்க்​கப்​பல் பாது​காப்பு வழங்கி வரு​கிறது.

மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்​குள் இரு எரி​வாயு கப்​பல்​களும் இந்​தியா வந்து சேரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை சிறப்பு செய​லா​ளர் ராஜஷ் குமார் சின்ஹா கூறும்​போது, “இரு எரிவாயு கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்​டிருக்​கின்​றன. இந்த கப்பல்​களில் 92,700 மெட்​ரிக் டன் எல்​பிஜி காஸ் இருக்​கிறது’’ என்​றார்.

இதுகுறித்து மத்​திய பெட்​ரோலிய துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சமையல் காஸ் தட்​டுப்​பாட்டை சமாளிக்க உள்​நாட்​டில் எல்​பிஜி உற்​பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. இதன்​படி நாள்​தோறும் உள்​நாட்​டில் 55,000 டன் எல்​பிஜி உற்பத்தி செய்​யப்​படு​கிறது.

ஏற்​கெனவே வளை​குடா நாடுகளில் இருந்து 2 எரி​வாயு கப்​பல்​கள் இந்​தியா வந்துள்ளன. தற்​போது மேலும் 2 எரி​வாயு கப்​பல்​கள் விரைவில் இந்​தியா வந்து சேர உள்​ளன.

இவை தவிர நெதர்​லாந்​தில் இருந்து ஹெலாஸ் கிளாடியேட்​டர், அமெரிக்​கா​வில் இருந்து காஸ் ஜுபிட்​டர் ஆகிய 2 கப்​பல்​கள் தலா 24,000 டன் எல்​பிஜி காஸுடன் இந்தியா வரு​கின்றன.

இவை வரும் 30-ம் தேதி விசாகப்பட்டினம் துறை​முகத்தை வந்து சேரும். அமெரிக்​கா, கனடா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் இருந்து அடுத்​தடுத்து எல்​பிஜி காஸ் கப்​பல்​கள் இந்​தி​யா​வுக்கு வர உள்​ளன.

இதே​போல ரஷ்​யா​வில் இருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யப்​படு​கிறது.

வளை​குடா பகு​தி​யில் முகாமிட்​டுள்​ள12-க்​கும் மேற்​பட்ட போர்க்​கப்​பல்​கள், ஹார்​முஸ்​ ஜலசந்​தியை கடந்​து வரும்​ இந்​திய எண்​ணெய்​ கப்​பல்​களுக்​கு ​பாது​காப்​பு வழங்​கி வரு​கின்​றன.இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *