சட்​டப்​பேரவைத் தேர்​தலில் அண்​ணா​மலை போட்​டி​யிட வேண்​டும் என பாஜக மகளிரணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன் விருப்​பம்!!

சென்​னை​
சட்​டப்​பேரவைத் தேர்​தலில் அண்​ணா​மலை போட்​டி​யிட வேண்​டும் என பாஜக மகளிரணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று சென்​னை​யில் உள்ள பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் ஒருங்​கிணைந்து தேர்​தலில் வெற்றி பெறு​வோம் என்ற நம்​பிக்​கையோடு மிக வேக​மாக​வும், உறு​தி​யாக​வும் களப்​பணி​களை ஆரம்​பித்​து​விட்​டார்​கள்.

பாஜக-வுக்கு 27 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டிருக்​கிறது. மாநில தலை​மை, வேட்​பாளர்​கள் பட்​டியலை டெல்​லிக்கு அனுப்பி வைத்த பிறகு, மத்​திய தேர்​தல் குழு அந்த தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை அறி​விப்​பார்​கள்.

கூட்​டணி என வரும் போது, எதிர்​பார்க்​கும் தொகு​தி​கள், கிடைப்​ப​தில் சாதக பாதகம் இருக்​கலாம். இதெல்​லாம் கலந்​தது தான் கூட்​ட​ணி.

எனவே, பாஜக பெற்​றிருக்​கும் அத்​தனை தொகு​தி​களி​லும் வெற்றி பெற வேண்​டும் என்​ப​தற்​காக திட்​ட​மிட்​டு, அதற்​கான வேட்​பாளர் தேர்வு உள்​ளிட்ட அடுத்​தக்​கட்ட பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

அண்​ணா​மலை போட்​டி​யிடப் போவ​தில்லை என டெல்லி தலை​மைக்கு கடிதம் எழு​தி​யிருக்​கி​றாரா என்​பது எனக்​குத் தெரிய​வில்​லை. ஆனால், அண்​ணா​மலை போட்​டி​யிட வேண்​டும் என்​பது என்​னுடைய விருப்​பம்.

நிச்​ச​யம் அண்​ணா​மலை சட்​டப்​பேர​வைக்​குள் செல்ல வேண்​டும். கமல்​ஹாசன் கட்சி ஆரம்​பித்து 2019-ல் அவரது கட்சி சார்​பில் வேட்​பாளர்​கள் நிறுத்​தப்​பட்​டார்​கள்.

மக்​களும் அவர்​களுக்கு வாக்​களித்​தார்​கள். அவரை நம்பி ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் பணத்​தை​யும், நேரத்​தை​யும் செல​வழித்து உழைத்​தார்​கள்.

ஆனால், தன்​னுடைய சுயநலத்​தின் காரண​மாக, தான் மட்​டும் ராஜ்ய சபா எம்.பி. ஆகி​விட்​டு, அவரை நம்பி கட்​சி​யில் பயணித்த, கட்​சிக்​காக உழைத்த அத்​தனை பேரை​யும் அம்​போவென கமல்​ஹாசன் கைவிட்​டு​விட்​டார்.

இந்த நேரத்​தில் கோவை தெற்கு தொகுதி மக்​களை நான் பாராட்​டு​கிறேன். கமல்​ஹாசனுக்கு மிகச்​சரி​யான பதிலை மக்​கள் கொடுத்து அனுப்​பி​யிருக்​கி​றார்​கள்.

தன்​னுடைய கட்​சிக்​குக்​கூட விசு​வாச​மாக இல்​லாத, கட்​சி​யின் தொண்​டர்​களைக் கூட காப்​பாற்ற முடி​யாத ஒரு​வர், கட்சி ஆரம்​பித்து எப்​படி வீணாக போவது என்​ப​தற்கு கமல்​ஹாசனின் கட்சி ஒரு சாட்​சி.

அதனால், புதி​தாக கட்சி ஆரம்​பிக்​கிற எல்​லோரை​யும், மக்​கள் இனி அவர்​கள் நமக்​காக வேலை செய்​வார்​களா, நம்​மோடு தொடர்ச்​சி​யாக பயணிப்​பார்​களா, கொள்கை அரசி​யல் என வரும் போது அதில் சமரசம் செய்து கொள்​ளாமல் இருப்​பார்​களா எனப் பார்க்க வேண்​டும்.

இதற்​கு, கமல்​ஹாசனும், அவரது கட்​சி​யும் சிறந்த உதா​ரணம். மக்​கள் இந்த கட்​சி​யிடம் இருந்து புரிந்து கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *