தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மாவட்ட அளவில் கணினி குலுக்​கல் மூலம் பிரிக்​கப்​பட்ட வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தொகுதிவாரியாக அனுப்​பும் பணி தொடங்​கியது!!

சென்னை:
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மாவட்ட அளவில் கணினி குலுக்​கல் மூலம் பிரிக்​கப்​பட்ட வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தொகுதிவாரியாக அனுப்​பும் பணி நேற்று தொடங்​கியது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பயன்​படுத்த வேண்​டிய மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) மற்​றும் வாக்​காளர், தான் செலுத்​திய வாக்​கினை சரி​பார்க்​கும் கருவி​களின் (வி​வி​பாட்) முதற்​கட்ட பரிசோதனைக்கு பிறகு, அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் கட்​டுப்​பாட்​டில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த தேர்​தலில் மொத்​தம் தலா 90 ஆயிரம் கட்​டுப்​பாட்டு கருவி​கள் மற்​றும் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், 97,500 விவி​பாட் கருவி​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

இதில் பயன்​பாடு போக, பழு​தாகும்​போது மாற்​று​வதற்​கான 20 சதவீத இருப்பு வைப்பு இயந்​திரங்​களும் அடங்​கும்.

மாவட்ட அளவில் வைக்​கப்​பட்​டுள்ள இந்த இயந்​திரங்​களை, அங்​கீகரிக்​கப்​பட்ட கட்சி பிர​தி​நி​தி​கள் மற்​றும் மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் முன்​னிலை​யில் கணினி குலுக்​கல் முறை​யில் தொகு​தி​வாரி​யாக பிரிக்​கும் பணி மார்ச் 23-ல் நடை​பெற்​றது.

அதைத் தொடர்ந்​து, இயந்​திரங்​களை தொகு​தி​வாரி​யாக, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் அலு​வல​கம் செயல்​படும் வைப்​பறைக்​குக் கொண்டு செல்​லும் பணி, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில் நேற்று தொடங்​கியது.

அதன்​படி சென்​னை​யில் மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதே​போன்று அனைத்து மாவட்​டங்​களி​லும், அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் தலை​மை​யில் பணி​கள் நேற்று தொடங்​கின.

தமிழகம் முழு​வதும் தேர்​தல் பணி​யில் ஈடு​படும் அனைத்து வாக்​குச்​சாவடி அலு​வலர்​களுக்​கும், அந்​தந்த தேர்​தல் நடத்​தும் அதி​காரி அலு​வலக வளாகத்​தில்​ இன்​று பயிற்​சிகள்​ வழங்​கப்​பட உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *