திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்!!

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, இந்தத் தேர்தலில் பானை சின்னத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அவர், இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு, விசிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசிக-வின் மற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்:

வன்னி அரசு – திண்டிவனம் (தனி)

ஆற்றல் அரசு- பெரியகுளம் (தனி)

மாலதி – கள்ளக்குறிச்சி (தனி)

அப்துல் ரகுமான் – பண்ருட்டி

எழில் கரோலின் – அரக்கோணம் (தனி)

பன்னீர் தாஸ் – திருப்போரூர் (தனி)

சிந்தனைச் செல்வன் – செய்யூர் (தனி)

திமுக கூட்டணியில் 8 இடங்களைப் பெற்றுள்ள விசிக, அனைத்துத் தொகுதிகளிலும் தனது ‘பானை’ சின்னத்திலேயே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *