திருச்சி
திருச்சி மேற்கு – கே.என்.நேரு, திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர்- அன்பில் மகேஷ், லால்குடி – பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன், ஸ்ரீரங்கம்-துரைராஜ், காங்கிரஸ் வேட்பாளர்கள் துறையூர்- லெனின் பிரசாத், முசிறி – கருணை ராஜா, மணப்பாறை மமக வேட்பாளர் அப்துல் சமதை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருச்சி உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மீண்டும் மலர வேண்டும்.
* கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் திருச்சியில் 100 சதவீதம் வெற்றியை தர வேண்டும்.
* திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம்.
* சிறுபான்மை மக்களுக்காக எதையும் சாதிக்கும் ஆற்றல் படைத்தவர் இனிகோ.
* திருச்சியில் 2 மாதிரி பள்ளிகளை கட்டி இருக்கிறோம்.
* பேருந்து நிலையம் ஏர்போர்ட் அளவிற்கு உள்ளது என அண்டை மாநிலத்தவர் வியக்கின்றனர்.
* திருச்சியில் மட்டும் 327 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து இருக்கிறோம்.
* திருச்சிக்கு மட்டும் ரூ.26000 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* தலைநகர் சென்னைக்கு சவால் விடும் வகையில் திருச்சி தரம் பெற்று வருகிறது.
* முதலமைச்சரான முதல் நாளே மகளிர் விடியல் பயணத்திற்கு கையெழுத்து போட்டேன்.
* நம்மை பார்த்து தான் மற்ற மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.
* தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டங்களையும் செய்து வருகிறோம்.
* மகளிர் உரிமை தொகை நிறுத்த நினைத்தனர். 3 மாத தொகையை முன்கூட்டியே கொடுத்தோம்.
* தமிழகத்தில் சாதி கலவரங்கள் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை போல் மத கலவரங்கள் இல்லை.
* அமைதியான சூழல் நிலவுவதால் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.
* பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.3000 வழங்கினோம்.
* மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் ரூ.2000 ஆக வழங்கப்படும்.
* பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக வழங்கப்படும்.
* திருச்சிக்கு மட்டும் ரூ.26,000 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்.
* 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிதி நிலை சீராக்கி திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.