பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது !! மயிலாப்பூரில் தமிழிசை, சாத்தூரில் நயினார் போட்டி….

சென்னை: 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நயினார் நாகேந்திரன் சாத்தூரிலும், தமிழிசை சவுந்தர்ராஜன் மயிலாப்பூரிலும், எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும் போட்டியிடுகின்றனர். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை.

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், 4 முனைப் போட்டி நிலவும் சூழலில் அதிமுக தலைமையிலான பாஜக, பாமக, அமமுக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இம்முறை 27 தொகுதிகளில் களம் காண்கிறது.

தமிழக பாஜக வேட்பாளர்கள் விவரம்:

1. ஆவடி – ராஜசிம்ம மஹிந்திரா என்ற அஸ்வின் குமார்

2. மயிலாப்பூர் – தமிழிசை சவுந்தர்ராஜன்

3. தளி – நாகேஷ் குமார்

4. திருவண்ணாமலை – ஏழுமலை

5. ராசிபுரம் (தனி) – பிரேம்குமார்

6. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்

7. உதகமண்டலம் – போஜராஜன்

8. அவிநாசி (தனி) – எல்.முருகன்

9. திருப்பூர் தெற்கு – தங்கராஜ்

10. கோவை வடக்கு – வானதி சீனிவாசன்

11. திருவாரூர் – கோவி. சந்துரு

12. தஞ்சாவூர் – முருகானந்தம்

13. கந்தர்வக்கோட்டை (தனி) – உதயகுமார்

14. புதுக்கோட்டை – ராமச்சந்திரன்

15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

16. திருப்பத்தூர் – திருமாறன்

17. மானாமதுரை (தனி) – பால கணபதி

18. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்

19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்

20. ராமநாதபுரம் – நாகேந்திரன்

21. திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்

22. வாசுதேவநல்லூர் (தனி) – ஆனந்தன் ஐயாசாமி

23. ராதாபுரம் – பாலகிருஷ்ணன்

24. நாகர்கோவில் – காந்தி

25. குளச்சல் – சிவக்குமார்

26. பத்மநாபபுரம் – ரமேஷ்

27. விளவங்கோடு – விஜயதரணி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *