இன்று பிற்​பகல் 3 மணிக்கு ; டெல்லி கேப்​பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதல்!!

புதுடெல்லி:
ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 142 ரன்​கள் இலக்கை துரத்​திய டெல்லி அணி ஒரு கட்​டத்​தில் 4.3 ஓவர்களில் 26 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்து பரிதவித்​தது.

எனினும் 22 வயதான சமீர் ரிஸ்வி 47 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், அனுபவம் வாய்ந்த டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 32 பந்​துகளில், 39 ரன்​களும் சேர்த்து 17 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தனர்.

இதில் சமீர் ரிஸ்வி சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தார். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

முதல் ஆட்​டத்​தில் சிறப்​பாக செயல்​படத்​தவறிய கே.எல்​.​ராகுல், பதும் நிசங்​கா, நித்​திஷ் ராணா, அக்​சர் படேல் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பின்​வரிசை​யில் விப்ராஜ் நிகாம், டேவிட் மில்​லர் ஆகியோர் தாக்​குதல் ஆட்டத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்ள நடராஜன் லக்னோ அணிக்கு எதி​ராக 3 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​யிருந்​தார்.

இதே​போன்று லுங்​கி நிகிடி, குல்​தீப் யாதவ் ஆகியோ​ரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி இருந்​தனர். முகேஷ் குமார், அக்​சர் படேல் ஆகியோர் ரன் குவிப்பை வெகு​வாக கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர்.

இவர்​கள் மும்பை அணிக்கு எதி​ராக​வும் சிறப்​பாக செயல்பட முயற்​சிக்​கக்​கூடும். ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை அணி தனது முதல் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 221 ரன்​கள் இலக்கை துரத்​திய மும்பை அணி ரோஹித் சர்மா விளாசிய 78 ரன்​கள் மற்​றும் ரியான் ரிக்​கெல்​டன் சேர்த்த 81 ரன்​கள் உதவி​யுடன் எளி​தாக வெற்​றியை வசப்படுத்தியது.

இவர்​களு​டன் பேட்​டிங்​கில் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்மா, ஹர்​திக் பாண்​டி​யா, நமன் திர், ஷெர்ஃபேன் ரூதர்​போர்டு ஆகியோ​ரும் தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்​ட​வர்​கள்.

பந்​து​வீச்​சில் டிரெண்ட் போல்ட், ஜஸ்​பிரீத் பும்ரா, ஷர்​துதல் தாக்​குர் ஆகியோர் டெல்லி அணி​யின் பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ ​கொடுக்கக்கூடும்​.

ராஜஸ்தான் – குஜராத் மோதல்

இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *