நான் விளை​யாடு​வது அவர்​களுக்​குப் பிடிக்​காமல் இருக்கலாம்; நான் அடைந்த வெற்​றிகளால் அவர்​கள் பொறாமை அடைந்​திருக்​கலாம் – அஜிங்க்ய ரஹானே ஆதங்கம்!!

கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் தோல்வி அடைந்​தது.

நடப்பு சீசனில் கொல்​கத்தா அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யிட​மும் தோல்வி கண்​டிருந்​தது.

ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ராக 227 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி 16 ஓவர்​களில் 161 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கேப்​டன் அஜிங்க்ய ரஹானே 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான பின் ஆலன் 28 ரன்​களும், அங்​கிரிஷ் ரகு​வன்ஷி 52 ரன்களும் சேர்த்​தனர்.

கேமரூன் கிரீன் 2 ரன்​களில் வெளி​யேறினார். தோல்விக்கு பின்​னர் கொல்​கத்தா அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே கூறிய​தாவது: சிலர் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி விமர்​சிக்​கிறார்​கள்.

கடந்த 2020-ம் ஆண்​டுக்​குப் பிறகு இப்​போது​தான் நான் சிறந்த ஸ்டிரைக் ரேட்​டில் விளையாடுகிறேன். என்​னைப் பற்றி பேசுபவர்​கள் போட்டியைப் பார்க்​கிறார்​களா எனத் தெரிய​வில்​லை. அல்லது எனக்கு எதி​ராக ஒரு முடி​வினை வைத்திருக்கலாம்.

நான் விளை​யாடு​வது அவர்​களுக்​குப் பிடிக்​காமல் இருக்கலாம். நான் அடைந்த வெற்​றிகளால் அவர்​கள் பொறாமை அடைந்​திருக்​கலாம். அதற்​காக நான் பெரி​தாகக் கவலைப்​பட​வில்​லை.

என்​னைப் பற்றி நேர்மறையாகவோ அல்​லது எதிர்​மறை​யாகவோ சிலர் பேசுகிறார்​கள். எப்​படியோ என்​னைப் பற்றி பேசுகிறார்களே அதுவே மகிழ்ச்​சி.

என் திறமை மீது நான் நம்​பிக்கை வைத்​திருக்​கிறேன். என்​னைப் பற்றி யார் என்ன பேசி​னாலும் பேசட்​டும். இவ்​வாறு ரஹானே கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *