புதுவையில் உதயநிதி 7-ந்தேதி பிரசாரம்!!

புதுவை;
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

2-ம் கட்ட பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்ய வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார்.

அன்று காலை 10 மணிக்கு முதலியார் பேட்டை, உப்பளம், பாகூர் ஆகிய தொகுதிக்கு மரப்பாலத்திலும், காலை 10.30 மணிக்கு வில்லியனூர், திருபுவனை, மங்கலம் தொகுதிக்கு வில்லியனூர் சன்னதி தெருவிலும், காலை 11.30 மணிக்கு நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, காலாப்பட்டு, கதிர்காமம், ராஜ்பவன் தொகுதிகளுக்கு அண்ணாசிலை அருகிலும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *