மூணாறு பகுதியில் அரசுப் பள்ளிக்கு உதவிய ‘அறிவு’ படக்குழு!!

சென்னை:
சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம், ‘அறிவு’. மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு பகுதிகளில் நடைபெற்றது.

அங்குள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது தெரியவந்தது.

தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *