மேஷம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும்பொழுது யோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
வரவு திருப்தி தரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றும் முயற்சி கைகூடும்.
கன்னி
இல்லத்தில் நல்லது நடக்கும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
துலாம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். விவாக பேச்சுகள் முடிவாகும்.
விருச்சகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுகள் முடிவிற்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபச்செய்திகள் உண்டு. வரவு திருப்தி தரும்.
மகரம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் ஆதாயம் தரும்.
கும்பம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மீனம்
மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.