திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜய், விஜய் சிலையுடன் ஓட்டுவேட்டை!!

திருவெறும்பூர்;
திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜய், விஜய் சிலையுடன் ஓட்டுவேட்டையாடி வருவது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்க வந்தால் அவர் மீது வழக்குகள் பதியப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், விஜய் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால்,திருச்சி திருவெறும்பூர் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி, ஒரு நூதன முறையை கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

தனது வேட்புமனு தாக்கலின்போது விஜய் அருகில் இருக்கவேண்டும். வேட்புமனு தாக்கல் முடிந்த கையுடன், அவர் தனக்கு பிரச்சாரம் செய்யவேண்டும் என்று எண்ணிய அவர், விஜய் போலவே ஒரு சிலையை செய்து தனது பிரச்சார வேனில் ஏற்றிக் கொண்டார்.

வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது அந்த சிலையுடன் வேனில் சென்றார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அந்த சிலையுடன் திருவெறும்பூர் தொகுதியில் வலம் வந்து தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

விஜய்க்கு பதில் பொம்மை செய்து ஓட்டுவேட்டையாடி வரும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரின் ஐடியா, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் ஒருசேர அள்ளிக்குவித்து வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *