இளையராஜா​வின் 50 ஆண்டு கால இசைப் பயணத்​தைக் கொண்​டாடும் வகை​யில் வட அமெரிக்​கா​வில் பிரம்மாண்ட இசை சுற்றுப்பயணம்!!

சென்னை: ​
இளையராஜா​வின் 50 ஆண்டு கால இசைப் பயணத்​தைக் கொண்​டாடும் வகை​யில் வட அமெரிக்​கா​வில் பிரம்மாண்ட இசை சுற்​றுப்​பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் அவர் நேரடி​யாக இசை நிகழ்ச்​சிகளை நடத்த இருக்​கிறார்.

லாஸ் ஏஞ்​சல்​ஸிலுள்ள டால்பி திரையரங்​கம் மற்​றும் பே ஏரி​யா​வில் உள்ள ஓக்​லாண்ட் அரேனா போன்ற முக்​கிய மேடைகளில் அவரது இசை ஒலிக்க உள்​ளது.

‘மியூசிக் ஃபார் ஹீலிங்’ என்று பெயரிடப்​பட்​டுள்ள இந்த இசை விழாவை சரி​கமா லைவ், கேட்ச் த ரிதம்​ஸ், மெர்​குரி நிறுவனங்​கள் இணைந்து நடத்​துகின்​றன.

அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி, வாஷிங்​டன் டி.சி, சிகாகோ, அட்​லாண்​டா, டாலாஸ், ஹூஸ்​டன், சியாட்​டில், சான் ஜோசே, டொரான்டோ மற்​றும் மான்ட்​ரியல் ஆகிய பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடை​பெற இருக்​கிறது.

இந்த நிகழ்ச்​சி​யின் மூலம் கிடைக்​கும் வரு​வா​யின் ஒரு பகு​தி, இசை​யின் மூலம் மனநலம் மற்​றும் நல வாழ்வை மேம்​படுத்​தும் பணி​களுக்​காக வழங்​கப்​படும்.

“இளை​ய​ராஜா​வின் இசை, எல்​லைகள், தலைமுறைகளைத் தாண்​டி சென்​றுள்​ளது.

இந்த வரலாற்றுச் சுற்​றுப்​ பயணத்தை வட அமெரிக்கா​வுக்​குக் கொண்டு வரு​வது எங்​களுக்கு பெரு​மை​யாகும்” என இந்நிகழ்ச்​சியை நடத்​துபவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *