பெண்​கள், உங்​கள் வீட்டு வாசலில் விசிலை கோல​மாகப் போடுங்​கள் – விஜய்!!

சென்னை:
ஆண்​டுக்கு 6 சிலிண்​டர்​கள், 200 யூனிட் மின்​சா​ரம் இலவசம் என்று தவெக தேர்தல் அறிக்கை​யில் வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் ஓட்​டலில் நேற்று தவெக-​வின் தேர்​தல் அறிக்கை வெளி​யிடும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

அதில் தேர்​தல் அறிக்​கை​யின் முதல் பிர​தியை விஜய் வழங்க விவ​சாயி நாராயணன் பெற்​றுக் கொண்​டார்.

தொடர்ந்து ஆசிரியர், ஆட்டோ ஓட்​டுநர், அங்​கன்​வாடி ஊழியர், ஓய்வு பெற்ற எஸ்​பி, மீன​வர் உள்​ளிட்​டோர் தேர்​தல் அறிக்​கையை பெற்​றுக் கொண்​டனர்.

பின்​னர் விஜய் பேசி​ய​தாவது: திருக்​குறளின் அறம், பொருள், இன்​பம் ஆகிய அதி​காரங்​களின் அடிப்​படை​யில் தேர்​தல் அறிக்கை தயா​ரிக்​கப்​பட்​டிருக்​கிறது.

இந்த மூன்று அதி​காரங்​களும் அரசி​யலுக்​கும் ஆட்சி அதி​காரத்​துக்​கும் மிக​வும் முக்​கி​யம்.

நம்​முடைய தேர்​தல் அறிக்கை நேர்​மை​யான உத்​தர​வாதம். ஸ்டா​லின் சார் மாதிரி ஏமாற்ற மாட்​டோம்.

பலர் மாதிரி அள்​ளி​விடும் அவசர அறிக்​கை​யும் இல்​லை. திமுக​வும் மற்​றும் பலரும் ஒன்​று​தான் என ஏற்​கெனவே சொன்​னோம்.

ஒரு​வர் 10 ஆயிரம் கொடுத்​தால் இன்​னொரு​வர் 8 ஆயிரத்​துக்கு கூப்​பன் தரு​கி​றார்.

ஒரு​வர் குளிர்​சாதனப்​ பெட்டி கொடுத்​தால் இன்​னொரு​வர் அதை வாங்க கூப்​பன் கொடுக்​கி​றார்.

இப்​படி இரு​வ​ரும் ஒரு தேர்​தல் அறிக்​கையை பெயரை மாற்றி கலரை மாற்றி கொடுத்​திருக்​கி​றார்​கள். இவர்​கள் இரு​வ​ரும் வேறு​வேறு இல்​லை.

மகளிர் மேம்​பாடு திட்​டத்​தின் கீழ் குடும்​பத் தலைவி​களுக்கு மாதம் ரூ.2,500, 6 விலை​யில்லா சிலிண்​டர்​கள், மணப்​பெண்​களுக்கு 1 சவரன் தங்​கத்​துடன் பட்​டுச்​சேலை, பிறக்​கும் குழந்​தைகளுக்​குத் தங்க மோதிரம், மாண​வர்​களின் அம்​மாக்​களுக்கு 15,000 கல்வி உதவித்​தொகை, மகளிர் குழுக்​களுக்கு ரூ.5 லட்​சம் வட்​டி​யில்லா கடன் வழங்​கப்​படும்.

இளைஞர் முன்​னேற்​றம் திட்​டத்​தின் கீழ் வேலை​யில்லா பட்​ட​தா​ரி​களுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்​தொகை, ஊதி​யத்​துடன் கூடிய 5 லட்​சம் இன்​டர்ன்​ஷிப், 5 லட்​சம் புதிய அரசு வேலை​வாய்ப்​பு​கள், தொழில் தொடங்க ரூ.25 லட்​சம் கடன் வழங்​கப்​படும்.

உலகத்​தரக் கல்வி திட்​டத்​தின் கீழ் உறை​விட வசதி​யுடன் 100 காம​ராஜர் சிறப்​புப் பள்​ளி​கள், ரூ. 20 லட்​சம் வரை உயர்​கல்விக் கடன், நவீன கட்​டமைப்​புடன் அரசுப் பள்​ளி​கள், AI மூலம் கட்​ட​ணமில்லா போட்​டித் தேர்வு பயிற்​சிகள், விவ​சா​யிகள் நலன் திட்​டத்​தின் கீழ் நில​முடைய விவ​சா​யிகளுக்கு ஆண்​டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி வழங்​கப்​படும்.

நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்​னுக்கு ரூ.4,500, 5 லட்​சம் சோலார் பம்​பு​கள், தொழி​லா​ளர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.10,000, 100% பயிர்க் காப்​பீடு வழங்​கப்​படும்.

சுகா​தா​ர​மான தமிழ்​நாடு திட்​டத்​தின் கீழ் குடும்​பத்​திற்கு ரூ.25 லட்​சத்​துக்கு மருத்​து​வக் காப்​பீடு, நவீன கட்​டமைப்​புடன் கூடிய மருத்​து​வ​மனை, ஆண்​டு​தோறும் கட்​ட​ணமில்லா முழு உடல் பரி​சோதனை, போதைப்​பொருள் இல்லா தமிழ்​நாடு உரு​வாக்​கப்​படும்.

மீன்​படி தடைக்​கால நிவாரணம் ரூ.27,000, மீன்​களுக்​குக் குறைந்​த​பட்ச ஆதார விலை, ரூ.25 லட்​சம் விபத்​துக் காப்​பீடு, மீன​வர்​களுக்கு நிரந்தர வீடு வழங்​கப்​படும்.

முதி​யோர், கைம்​பெண், மாற்​றுத்​திற​னாளி​களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்​வூ​தி​யம்.

200 யூனிட் கட்​ட​ணமில்லா மின்​சா​ரம், அனைத்து வீடு​களுக்​கும் குடிநீர் இணைப்​பு, நீண்​ட​காலம் பட்டா இல்​லாதவர்​களுக்​குப் பட்டா வழங்​கப்​படும்.

வேட்​பாளர்​களும் நானும் வேறில்​லை. மே 4 ஆம் தேதி புதிய ஒளி கிடைக்க வேண்​டும். பெண்​கள், உங்​கள் வீட்டு வாசலில் விசிலை கோல​மாகப் போடுங்​கள்.

தமிழ்​நாட்டுக்கு என்​ன​வாக இருந்​தா​லும் என் தொகு​திக்கு நான் எம்​.எல்​.ஏ-​தானே. பெரம்​பூருக்​கும் திருச்சி கிழக்கிற்​கும் மாதம் ஒரு முறை கட்​டா​யம் வரு​வேன்.

நீங்​கள் என்​னைச் சந்​தித்து கோரிக்​கை​களை தெரிவிக்​கலாம். இவ்வாறு அவர் பேசி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *