தவெக தலை​வர் விஜய் வாக்​கு​களை பிரிப்​பார், ஆனால் பழனி​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமை​யும் – நயினார் நாகேந்திரன் கருத்து!!

திருநெல்வேலி:
தவெக தலை​வர் விஜய் வாக்​கு​களை பிரிப்​பார், ஆனால் பழனி​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமை​யும் என்​று, பாஜக மாநில தலை​வரும் சாத்​தூர் தொகுதி வேட்​பாள​ரு​மான நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

பாளை​யங்​கோட்டை மகா​ராஜநகர் ஜெயேந்​திரா பள்ளி வாக்​குச்​சாவடி​யில் தனது வாக்கை பதிவு செய்த அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​து: திருநெல்​வேலி, சாத்​தூர் ஆகிய இரு தொகு​தி​களும் எனது இரண்டு கண்​கள்.

ஒரு நல்ல அரசாங்​கத்தை தேர்ந்​தெடுப்​ப​தற்கு மக்​களுக்கு இந்த வாய்ப்​பு, 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை கிடைத்​துள்​ளது. அந்த வாய்ப்​பாக இந்த நாள் அமைந்​துள்​ளது.

நாட்​டின் நலன் கரு​தி, எதிர்​கால சந்​த​தி​யின் நலன் கருதி தமிழகத்​தில் போதை பொருட்​கள் இல்​லாமல் இருக்க வேண்​டி, எதிர்​கால சந்​த​தி​கள் நல்ல முறை​யில் வாழ வழி​காட்​டும் வகை​யில், விலைமதிப்பு இல்​லாத வாக்​குரிமையை பயன்​படுத்த வேண்​டும்.

7 மணிக்கு தொடங்​கிய வாக்​குப்​ப​தி​வில் வாக்​குச்​சாவடிகளில் 500-க்​கும் மேற்​பட்​டோர் நீண்ட வரிசை​யில் காத்​திருந்த வாக்​களிக்​கிறார்​கள்.

5 ஆண்​டு​களாக முதல்​வ​ராக இருந்த ஸ்டா​லின் நல்​லாட்​சியை தரவில்லை என்​பது கண்​கூடாக தெரி​கிறது.

சாத்​தூர் மட்​டுமல்ல தமிழகம் முழு​வதுமே தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு பிர​காச​மான வெற்றி வாய்ப்​புள்​ளது.

எல்லா மக்​களும் ஆரவாரத்​துடன் மகிழ்ச்​சி​யாக வாக்​களித்து வரு​கிறார்​கள். மிகப்​பெரிய எழுச்சி கிடைத்​துள்​ளது.

விஜய்யால் தாக்​கத்தை ஏற்​படுத்த முடி​யாது. அனைத்து தொகு​தி​களி​லும் வாக்​கு​களை அவர் பிரிப்​பார்.

அதனால் என்டிஏ மீண்​டும் ஆட்சி அமைக்​கும். பழனிச்​சாமி முதல்​வர் ஆவார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *