கெய்ரோ:
எகிப்தின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சாம்பவி கிஷிர்சாகர், திவ்யான்ஷு தேவாங்கன் ஜோடி 499.9 புள்ளிகளை குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.
சீன தைபேயைச் சேர்ந்த சாய் சீ-யிங், சென் யூ-ஆன் ஜோடி 498.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், அதே நேரத்தில் பிரான்ஸைச் சேர்ந்த டிஃபென் போம்ஸ், காஸ்பர்ட் லெசியர் ஜோடி 434.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.