வெங்கி அட்லுரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது உறுதி!!

சென்னை:

வெங்கி அட்லுரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிப்பது உறுதி என தெரிகிறது.

’கர’ படத்தினை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெங்கி அட்லுரி, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா மற்றும் சாய் தரம் தேஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ‘கர’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் வெங்கி அட்லுரி குறித்து தனுஷ் பேசும் போது, “வெங்கி, நீங்கள் எனக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, அதன்பின் காணாமல் போய்விட்டீர்கள்.

அந்தக் கதையை, அதே கதையை விரைவில் மீண்டும் கொண்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். உங்களுடைய அடுத்தப் படமான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்துக்கு எனது வாழ்த்துகள்” என்று பேசினார் தனுஷ்.

தனுஷ் – வெங்கி அட்லுரி கூட்டணி இணைந்து ‘வாத்தி’ படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் இந்தப் பேச்சின் மூலம் இந்தக் கூட்டணி விரைவில் மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *