மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பை முழுவீச்சில் தொடங்க படக்குழு திட்டம்!!

சென்னை:
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பை முழுவீச்சில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதனால், இதன் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் எதுவுமே தெரியாமல் இருந்தது.

தற்போது ‘சேயோன்’ படப்பிடிப்பை மே மாதத்தில் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த முறை எந்தவித தடங்கலும் ஏற்படாத வகையில் நடிகர்களின் தேதி உள்ளிட்டவை அனைத்துமே சரியாக அமைந்துள்ளன. ஆகையால், மே மாதத்தில் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

மதுரையில் அழகர் கோயில் திருவிழா நடைபெறவுள்ளது. அங்கு கேமரா மட்டும் வைத்து அங்கு வரும் கூட்டத்தினரை படமாக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *