அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!

டெஹ்ரான்:
அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது.

பாகிஸ்​தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்​டப் பேச்​சு​வார்த்தை நடைபெறாததை தொடர்ந்​து, ஈரான் இந்த அதிரடி நிபந்​தனை​களை விதித்​துள்​ளது.

போர் நிறுத்​தம், ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் மேலாண்மை, அணுசக்தி விவகாரம் ஆகிய​வற்றை மைய​மாக வைத்து இந்தத்திட்டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

முதல் கட்​டம்: ஈரான் மற்​றும் லெப​னான் மீது போர் தொடுக்​கப்​ப​டாது என்​ப​தற்​கும், போர் முழு​மை​யாக நிறுத்​தப்படு​வதற்​கும் அமெரிக்கா முறை​யான உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும்.

இரண்​டாம் கட்​டம்: முதற்​கட்ட நிபந்தனை​கள் ஏற்​கப்​பட்​டால் மட்​டுமே, சர்​வ​தேச கடல் வழிப் போக்​கு​வரத்​தில் முக்​கியப் பங்கு வகிக்​கும் ஹார்முஸ் ஜலசந்தி நிர்​வாகம் மற்​றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்​கப்​படும்.

மூன்​றாம் கட்​டம்: மேற்​கண்ட இரு நிலைகளும் வெற்​றிகர​மாகக் கடந்த பின்​னரே, அணுசக்தி விவ​காரம் குறித்து ஈரான் விவா​திக்​கும். ஈரானின் யுரேனி​யம் செறிவூட்​டலை நிறுத்த வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் நீண்​ட​கால கோரிக்கை இதில் அடங்​கும்.

அமெரிக்​கா​வின் எதிர்வினை ஈரானின் இந்த முன்​மொழிவு குறித்து வெள்ளை மாளிகை செய்​தித் தொடர்​பாளர் ஒலி​வியா வேல்ஸ் கூறுகை​யில், “இவை மிக​வும் நுணுக்​க​மான ராஜதந்​திர விவ​காரங்​கள்.

பத்​திரி​கைகள் வாயி​லாக அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்​தாது. அமெரிக்க மக்​களின் நலனே எங்​களுக்கு முக்கியம்.

ஈரான் அணு ஆயுதம் பெறு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம்” என்​று திட்​ட​வட்​ட​மாகத்​ தெரிவித்தார்​.

4 மடங்கு தாக்குதல் ஈரான் துணை அதிபர் இஸ்மாயில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.

எங்கள் கணக்கு வித்தியாசமானது. எங்களின் ஒரு எண்ணெய் கிணறு பற்றி எரிந்தால், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் 4 எண்ணெய் கிணறுகள் பற்றி எரியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *