இன்றைய பஞ்சாங்கம்…

பராபவ ஆண்டு, சித்திரை-18 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பவுர்ணமி இரவு 11.07 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : சுவாதி நாளை விடியற்காலை 4.37 வரை பிறகு விசாகம்

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்

சித்ரா பவுர்ணமி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல். திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் குரு பூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன்,சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சுபம்

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-ஆதரவு

சிம்மம்-நலம்

கன்னி-புகழ்

துலாம்-உழைப்பு

விருச்சிகம்-நற்செயல்

தனுசு-விருத்தி

மகரம்-கடமை

கும்பம்-இன்பம்

மீனம்-கண்ணியம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *