மாட்​ரிட் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறு​தி​யில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அதிர்ச்​சித் தோல்​வி!!

மாட்​ரிட்:
மாட்​ரிட் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறு​தி​யில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அதிர்ச்​சித் தோல்​வியடைந்​தார்.

ஸ்பெ​யின் தலைநகர் மாட்​ரிட் நகரில் மாட்​ரிட் ஓபன் டென்​னிஸ் போட்​டிகள் நடை​பெற்று வருகின்​றன.

நேற்று நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் கால் இறு​திப் போட்​டி​யில் போட்​டித் தரவரிசை​யில் 12-ம் இடத்​தில் உள்ள காஸ் பர் ரூடும், பெல்​ஜிய வீரர் அலெக்​சாண்​டர் பிளாக்​ஸும் மோதினர்.

இந்​தப் போட்​டி​யில் அலெக்​சாண்​டர் பிளாக்ஸ் சிறப்​பாக விளை​யாடி புள்​ளி​களைக் குவித்​தார்.

இறு​தி​யில் பிளாக்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் முன்​னிலை வீர​ரான காஸ்​பர் ரூட்டை தோல்​வி​யுறச் செய்​தார். இதன்​மூலம் அலெக்​சாண்​டர் பிளாக்ஸ் அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *