கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ 2வது லுக் வெளியீடு…

சென்னை:
கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘சத்தியவான் சாவித்திரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடிக்கிறார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்தியவான் சாவித்திரி படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், படத்தின் 2வது லுக் இன்று வெளியானது!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *