ஜூலையில் வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!!

சென்னை:
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், செல்ல அய்யாவு எழுதி, இயக்கி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானப் படம் கட்டா குஸ்தி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்திலும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமியே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனையும் செல்ல அய்யாவுவே இயக்கியுள்ளார்.


மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது.

மேலும் படம் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *