வங்கதேசத்துடன் 2-வது டெஸ்ட்: 232 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணி!!

சில்ஹெட்:
வங்கதேச அணிக்கெதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் தொடங்கியது.

முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபர் அசம் 68 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *