‘இதயம் முரளி’ ஜூலை 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!!

சென்னை:
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இதயம் முரளி. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


அதர்வாவுடன் கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், ஃபகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ரக்‌ஷன், நிஹாரிகா, மற்றும் ‘பரிதாபங்கள்’ திராவிட் செல்வம் ஆகியோரும் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இதயா பாடல் எல்லாம் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *