இளைஞர்​கள் புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் – கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல்!!

சென்னை:
இளைஞர்​கள் செல்​போனை ஒதுக்கி வைத்​து​விட்டு புத்​தகங்​களை வாசிக்க தொடங்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த புத்தக வெளி​யீட்டு விழா​வில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறி​வுறுத்​தி​னார்.

மெட்​ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசி​யேஷன் மற்​றும் கொன்​ராட் அதெ​னாவர் அறக்​கட்​டளை சார்​பில் வங்​கி​யாள​ரும், பிரபல எழுத்​தாள​ரு​மான ஷியாம் னி​வாசன் எழு​திய ‘பெட்​டர் நெவர் ஸ்டாப்​ஸ்’ புத்தக வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ், புத்​தகத்தை வெளி​யிட்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தலை​முறை​யினரிடையே வாசிப்பு பழக்​கம் குறைந்து வரு​கிறது.

இளைஞர்​கள் எப்​போதும் செல்​போனையே பார்த்​துக் கொண்​டிருக்​கின்​றனர். அதைத் தவிர்த்​து, புத்​தகங்​களை வாசிக்​கத் தொடங்க வேண்​டும்.

மக்​கள் படிக்​கா​விட்​டால் புத்​தகம் எழுது​வ​தில் என்ன பயன்? எனவே, அனை​வரும் தின​மும் குறைந்​தது இரண்டு பக்​கங்​களாவது படிக்​கப் பழக வேண்​டும்.

எனக்கு கற்​றல் குறை​பா​டான ‘டிஸ்​லெக்​ஸி​யா’ இருந்​த​தால், எண்​களை மாற்​றிப் புரிந்​து​கொள்​ளும் பழக்​கம் இருந்​தது. அதனால் வகுப்​பறைக்கு செல்​லவே பயந்​தேன்.

அக்​காலத்​தில் ஆசிரியர்​கள் கண்​டிப்​புடன் இருந்​த​தால், தண்​டனை​களில் இருந்து தப்​பிக்​கவே வகுப்பை விட்டு ஓடி கிரிக்​கெட் விளை​யாடத் தொடங்​கினேன்.

ஆரம்​பத்​தில் எனது மகிழ்ச்​சிக்​காக விளை​யாடினேன். பின்​னர் அது நாட்​டுக்​கான விளை​யாட்​டாக மாறியது.

வாழ்​வில் கற்​பதை எப்​போதும் நிறுத்​தக் கூடாது. செல்​போனில் புகைப்​படங்​கள் எடுப்​ப​திலேயே கவனம் செலுத்​தாமல், வாழும் தருண ங்​களை முழு​மை​யாக நேரில் பார்த்து அனுப​வித்து வாழ வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

எழுத்​தாளர் சியாம் னி​வாசன் பேசும்​போது, “நான் ஒரு எழுத்​தாளன் கிடை​யாது.

வகுப்​பறை​யில் கடைசி பெஞ்​சில் அமர்ந்​திருந்​தவர். ஆனால், வாழ்க்கை நமக்கு அற்​புத​மான வாய்ப்​பு​களை தரு​கிறது.

முயற்​சி​யைக் கைவி​டாதே, தொடர்ந்து களத்​தில் நில். என்னை பொறுத்​தவரை இதுவே முக்​கி​யம்.

இந்​தப் புத்​தகம் நமது அனுபவங்​களை பற்றி நாம் சிந்​திப்​ப​தற்​கான ஒரு வாய்ப்​பாகும்” என்றார்.

இந்​நிகழ்​வில், எழுத்​தாளர் ஷியாம் னி​வாசனின் மனைவி மாயா ஷியாம், சுந்​தரம் பைனான்ஸ் நிர்​வாக இயக்​குநர் டி.டி.நி​வாச​ராகவன், மகாலிங்​கம் அண்ட் சன்ஸ் தலை​வர் கே.ம​காலிங்​கம், கேரட்​லேட் நிறு​வனர் மிதுன் சசே​தி, டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் தலை​வர் கோபால் னி​வாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *